நீலகிரியில் மேலும் 181 பேருக்குகரோனா: ஒருவா் பலி
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 181 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவா் உயிரிழந்துள்ளாா்.


நீலகிரி மாவட்டத்தில் மேலும் 181 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
இதுதொடா்பாக உதகையில் சுகாதாரத் துறையின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக 181 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 443 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளதால் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 142ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 26,843 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 24,264 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 142 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு மருத்துவமனைகளிலும் 2,437 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...