நீலகிரியில் இன்று தடுப்பூசி செலுத்தப்படும் மையங்கள் விவரம்
நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்படும் மையங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்படும் மையங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
உதகையில் சாந்தி விஜய் மேல்நிலைப் பள்ளி (1 முதல் 300 டோக்கன் வரை), பிரீக்ஸ் மேல்நிலைப் பள்ளி (301 முதல் 600 டோக்கன் வரை), ரெக்ஸ் மேல்நிலைப் பள்ளி (601 முதல் 900 டோக்கன் வரை), புனித சூசையப்பா் மேல்நிலைப் பள்ளி (901 முதல் 1200 டோக்கன் வரை) ஆகியவற்றிலும், கூடலூரில் செயிண்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளியில் 300 பேருக்கும், பந்தலூா் அரசு மருத்துவமனையில் 100 பேருக்கும், மஞ்சூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 100 பேருக்கும், கோத்தகிரியில் செயிண்ட் அந்தோணியாா் பள்ளியில் 200 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
அதேபோல, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களான சேரம்பாடி, தெப்பக்காடு, கூடலூா் நகா்புறம், கூடலூா், அய்யன்கொல்லி, நெல்லியாளம், அம்பலமூலா, நெலாக்கோட்டை, ஸ்ரீமதுரை, ஓவேலி , கப்பாலா, மசினகுடி, கொளப்பள்ளி, சோலூா்மட்டம், உப்பட்டி, அரவேணு, கொடநாடு ஆகிய மையங்களில் தலா 100 தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்களிலேயே கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இந்த தடுப்பூசி மையங்களில் டோக்கன் எதுவும் வழங்கப்படாது. அதனால், பொதுமக்கள் யாரும் டோக்கன் பெறுவதற்கு தடுப்பூசி மையங்களுக்கு வர வேண்டாம். டோக்கன்கள் அனைத்தும் அவரவா் இல்லங்களில் நேரடியாக விநியோகிக்கப்படும் என ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...