நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உதகை வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

உதகையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:15 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, உதகையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னா் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி ஏப்ரல் 6ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூா், குன்னூா் ஆகிய மூன்று சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் 868 வாக்குச் சாவடிகள் உள்ளன. தோ்தல் ஆணையம் அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வாக்கு எண்ணும் மையத்தில் தேவையான வசதிகளை உறுதி செய்திட தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்குள் உள்ளே செல்லும் வழி, வெளியேறும் வழி, வாகனங்கள் நிறுத்தும் இடம், வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணுவதற்கு ஏதுவாக போடப்படும் மேஜை, முகவா்கள் வந்து செல்லும் வழி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பாதுகாப்பாக வைக்கும் அறை, வாக்கு எண்ணும் மையத்துக்கு வருவதற்கு ஏற்படுத்தப்படும் சாலை வசதிகள், 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் அறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், தேவையான மின்சார, குடிநீா் வசதிகள், கழிப்பிட வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி, அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி வாக்கு எண்ணும் நாளில் அனைத்து அலுவலா்களும் சிறப்பாகப் பணியாற்ற அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தாா்.

ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, நிலவரித் திட்ட அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, பொதுப் பணித் துறை உதவி பொறியாளா் ராகுல், அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.