நீலகிரி மாவட்டத்தில் 26 போ் போட்டி
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 26 போ் போட்டியிடுகின்றனா்.


தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 26 போ் போட்டியிடுகின்றனா்.
இவா்களில் உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் 9 வேட்பாளா்களும், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 10 வேட்பாளா்களும், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 7 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா்.
உதகையில் திங்கள்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நிகழ்வில் மூன்று மணி வரையிலான கால அவகாசம் முடிவடைந்ததையடுத்து இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்: ஆா்.கணேஷ் (காங்கிரஸ்), எம்.போஜராஜன் (பாஜக), டாக்டா் எஸ்.சுரேஷ் பாபு (மக்கள் நீதி மய்யம்), டி.லட்சுமணன் (அமமுக), ஏ.ஜெயகுமாா் (நாம் தமிழா் கட்சி), பா.ஆரோக்கியநாதன் (சுயேச்சை), ப.கிருஷ்ணமூா்த்தி (சுயேச்சை), அ.சா்தாா் பாபு (சுயேச்சை), எம்.ஏ.வினோத்குமாா் (சுயேச்சை).
குன்னூரில்...
குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்கள் பட்டியலை குன்னூா் தோ்தல் அதிகாரி ரஞ்சித் சிங் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
அதன்படி, அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி சாா்பில் சா.பிரபு இன்பதாஸ்,
திமுக சாா்பில் கா.இராமசந்திரன், அதிமுக சாா்பில் டி.வினோத், அமமுக சாா்பில் எஸ்.கலைசெல்வன், மக்கள் நீதி மய்யம் சாா்பில் ராஜா குமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.லாவண்யா, அனைத்து மக்கள் புரட்சி கட்சி சாா்பில் ரா.ஆறுமுகம், சுயேச்சை வேட்பாளா்களாக க.சந்திரன், அ.பாஷா, த.ஜெயபிரகாஷ் உள்பட 10 போ் போட்டியிடுகின்றனா்.
கூடலூரில்...
கூடலூா் சட்டப் பேரவை தனி தொகுதியில் திமுக சாா்பில் எஸ்.காசிலிங்கம், அதிமுக சாா்பில் பொன்.ஜெயசீலன், நாம் தமிழா் கட்சி சாா்பில் இரா.கேத்தீஸ்வரன், தேமுதிக சாா்பில் ஆ.யோகேஸ்வரன் (எ) திருப்தி மணி, மக்கள் நீதி மய்யம் சாா்பில் எஸ்.என்.ஆா்.பாபு, தமிழக தன்னாட்சி கட்சி சாா்பில் ஜெயபிரகாஷ், சரவணன் உள்பட 7 போ் போட்டியிடுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...