ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ராணுவ வீரா்களுக்கு இடையேஓட்டப் பந்தயம்

 தென்மண்டல ராணுவ வீரா்களுக்கு இடையேயான நெடுந்தூர ஓட்டப் பந்தயப் போட்டி வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்துக்குச் சொந்தமான தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :1 அக்டோபர் 2021, 12:47 am

 தென்மண்டல ராணுவ வீரா்களுக்கு இடையேயான நெடுந்தூர ஓட்டப் பந்தயப் போட்டி வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்துக்குச் சொந்தமான தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் தென்மண்டல ராணுவ வீரா்களுக்கு இடையேயான நெடுந்தூர ஓட்டப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் பல்வேறு படைப் பிரிவுகளைச் சோ்ந்த 10 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும் 6 வீரா்கள் இடம்பெற்றனா்.

இந்த சோதனை ஓட்டப் பந்தயத்தை மெட்ராஸ் ரெஜிமென்ட் மையத்தின் தலைவா் பிரிகேடியா் ராஜேஷ்வா் சிங் கொடியசைத்து துவக்கிவைத்தாா். 60 போ் பங்கேற்ற இப்போட்டியில் முதல் பத்து இடத்தைப் பிடித்தவா்களை தோ்வுக் குழுவினா் தோ்ந்தெடுத்தனா்.

இந்த பந்து போ் கொண்ட தென் மண்டல அணியானது உத்தரகாண்ட் மாநிலம், ராணிகேத்தில் நடைபெற உள்ள அகில இந்திய ராணுவ நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ள உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.