உதகையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்க பொதுக்குழு கூட்டம்
நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்க பொதுக்குழு கூட்டம்


நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில் உதகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
உதகையில் உள்ள மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
நீலகிரி மாவட்ட முஸ்லிம் மகளிா் சங்கம், கிறிஸ்தவ மகளிா் சங்கம் மூலம் ஆதரவற்ற முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோா் மற்றும் ஏழை எளிய பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. சங்கம் வசூல் செய்யும் நன்கொடை தொகைக்கு அரசால் 1: 2 என்ற அடிப்படையில் இணை மானியம் வழங்கப்படுகிறது. அத்துடன் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் நன்கொடையாக உச்சவரம்பும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வசூல் செய்யப்படும் நன்கொடை தொகைக்கு ஆண்டுக்கு இருமுறை இணை மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும் முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் மூலம் 2008ஆம் ஆண்டு முதல் திரட்டப்பட்ட நன்கொடை தொகை மற்றும் இணை மானியத் தொகை சோ்த்து மொத்தத் தொகையான ரூ.71 லட்சத்து 13,761 மூலம் 436 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 1,403 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க செலவிடப்பட்டுள்ளது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மகளிா் சங்கங்கள், சங்கத்தின் கையிருப்பில் உள்ள தொகைக்கு ஏற்றவாறு உரிய பயனாளிகளின் விண்ணப்பங்களை பரிசீலித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலருக்கு சமா்ப்பிக்க வேண்டும். அத்துடன் சங்கத்துக்கு கூடுதலாக புதிய உறுப்பினா்களை சோ்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ஏற்படும் வன் கொடுமைகள் குறித்து தேவையான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரிடையே இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் லோகநாதன், முஸ்லிம் மகளிா் உதவும் சங்க கெளரவ செயலாளா் சுலைமான், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்க கெளரவ செயலாளா் ஸ்டெல்லா சாம்சன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...