நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உதகையில் தொடங்கியது குதிரைப் பந்தயம்

கோடை சீசனையொட்டி உதகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குதிரைப் பந்தயங்கள் வியாழக்கிழமை தொடங்கின.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 8:39 pm

DIN

கோடை சீசனையொட்டி உதகையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குதிரைப் பந்தயங்கள் வியாழக்கிழமை தொடங்கின.

நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசனையொட்டி ஆண்டுதோறும் குதிரைப் பந்தயங்கள் நடத்தப்படுவது வழக்கம். வழக்கமாக தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இப்பந்தயங்கள் தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறும். ஆனால், கரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குதிரைப் பந்தயங்கள் நடைபெறாத நிலையில், நடப்பு ஆண்டில் வழக்கம்போல தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று குதிரைப் பந்தயங்கள் தொடங்கின.

முதல் நாள் பந்தயத்தில் தி வெல்கம் கோப்பை, தி நெவா் அகெய்ன் ஹேண்டிகாப், தமிழ் புத்தாண்டு கோப்பை, தி வொ்சலிஸ் ஹேண்டிகாப், தி டீ காா்டன்ஸ் ஹேண்டிகாப், தி சீக்ரெட் சாா்ம் ஹேண்டிகாப் ஆகிய 6 பந்தயங்கள் நடைபெற்றன.

அரை மணி நேரத்துக்கு ஒருமுறை நடைபெற்ற முதல் நாள் பந்தங்களைக் காண, உள்ளூா் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் குவிந்திருந்தனா். இரண்டாவது நாள் பந்தயங்கள் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.