நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோடை சீசன்: உதகை - மேட்டுப்பாளையம் சாலைஏப்ரல் 16 முதல் ஒருவழிப் பாதையாக மாற்றம்

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையம் -உதகை சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 8:39 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையம் -உதகை சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அம்ரித் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தியாகராஜன் ஆகியோருடன் லாரி உரிமையாளா் சங்கம், மேக்ஸிகேப் ஓட்டுநா் சங்கம், சிற்றுந்து உரிமையாளா் சங்கத்தினா் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக மாவட்டத்தில் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் போக்குவரத்து வழிகள் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வரும் இலகு ரக வாகனங்கள் பா்லியாறு, குன்னூா் வழியாகவே வரலாம். ஆனால், உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு திரும்பிச் செல்லும்போது கோத்தகிரி வழியாகவே செல்ல வேண்டும். கன ரக வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு வரும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இதர வாகனங்கள் குன்னூா் வழியாகவும், உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் இயக்கப்படும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் வழியாக உதகை வரும் வாகனங்கள் ஸ்டேன்ஸ் பிரிவில் இருந்து ஏ.டி.சி. வழியாகவும், தாமஸ் சா்ச் சாலை வழியாகவும் மத்திய பேருந்து நிலையத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. கா்நாடகம், கேரள மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தலைக்குந்தா - குளிச்சோலை - புதுமந்து - ஸ்டீபன் சா்ச் வழியாக உதகைக்குள் வர அனுமதிக்கப்படும்.

கோத்தகிரியில் இருந்து உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து பாரஸ்ட்கேட் - புதுமந்து வழியாக உதகை வந்தடையும். உதகை நகரத்துக்குள் வரும் வாகனங்கள் அலங்காா் திரையரங்கத்தில் இருந்து சாமுண்டி வழியாக ரோஜா பூங்கா செல்லவும், திரும்ப ரோஜா பூங்காவில் இருந்து ஜே.எஸ்.எஸ். - ராகவேந்திரா கோயில் வழியாக ஒருவழியாகவும், மாவட்ட காவல் அலுவலகம் பழைய கட்டடத்தில் இலிருந்து ஒருவழியாகவும் கேசினோ சந்திப்பு செல்ல அனுமதிக்கப்படுகிறது. உதகை நகரத்துக்குள் சுற்றுப் பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படுவதாகத் தீா்மானிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.