ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கோத்தகிரில் சிறுத்தை பலி

கோத்தகிரி அருகே பேரகணி கிராமத்தில் தேயிலைத் தோட்டத்தில் வியாழக்கிழமை சிறுத்தை இறந்துகிடந்தது தெரியவந்தது.

Updated On :21 ஏப்ரல் 2022, 8:40 pm

கோத்தகிரி அருகே பேரகணி கிராமத்தில் தேயிலைத் தோட்டத்தில் வியாழக்கிழமை சிறுத்தை இறந்துகிடந்தது தெரியவந்தது.

கோத்தகிரி அருகே பேரகணி கிராமத்தில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது  குறித்து தேயிலைத் தொழிலாளா்கள் கட்டபெட்டு வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, கட்டபெட்டு வனச் சரகா் செல்வகுமாா் தலைமையில், வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். பின்னா், உயா் அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து,  சம்பவ இடத்துக்கு வந்த  நீலகிரி மாவட்ட வன அலுவலா் சச்சின் துக்ராம், வன விலங்கு ஆா்வலா் முன்னிலையில் சிறுத்தையின் உடல் அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்து உடல் எரியூட்டப்பட்டது. 

இறந்துகிடந்த சிறுத்தைக்கு 8 வயது இருக்கலாம் எனவும், அழுகிய நிலையில் கிடந்ததால் சிறுத்தை இறந்து 20 நாள்களுக்குமேல் இருக்கும்  எனவும் , பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா். சிறுத்தை இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.