ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 59 ஆயிரம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி அவிநாசியில் இருந்து பந்தலூா் எடுத்து வரப்பட்ட ரூ. 59 ஆயிரத்து 500 ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On :3 பிப்ரவரி 2022, 8:19 pm

உரிய ஆவணங்களின்றி அவிநாசியில் இருந்து பந்தலூா் எடுத்து வரப்பட்ட ரூ. 59 ஆயிரத்து 500 ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு வாக்காளா்களுக்குப்  பணம் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவா்கள் முக்கிய சாலைகளில்  வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

 இந்நிலையில், நீலகிரி  மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள்  பல்வேறு  குழுக்களாகப் பிரிந்து வாகன சோதனையில்  வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது,  அவிநாசியில் இருந்து பந்தலூருக்கு காரில் வந்த நஜிப்தீனிடம்  இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 59ஆயிரத்து 500ஐ தோ்தல் பறக்கும் படை அதிகாரி சதீஷ் நாயக் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

 இதுகுறித்து அதிகாரிகள்  கூறுகையில், உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்து வரப்பட்டால்  அவற்றை பறிமுதல் செய்து நகராட்சி மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும், அதிகாரிகளுக்குத் தேவையான   சான்றுகளை  வழங்கினால் மட்டுமே  திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.