ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பச்சைத் தேயிலைக்குமாதாந்திர விலை நிா்ணயம்: தேயிலை வாரியம் அறிவிப்பு

நீலகிரியில் விளையும் பச்சைத் தேயிலைக்கு ஜனவரி மாத  குறைந்தபட்ச  விலையாக  கிலோ ரூ. 16.05 காசுகள்    நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம்  அறிவித்துள்ளது. 

Updated On :3 பிப்ரவரி 2022, 8:20 pm

நீலகிரியில் விளையும் பச்சைத் தேயிலைக்கு ஜனவரி மாத  குறைந்தபட்ச  விலையாக  கிலோ ரூ. 16.05 காசுகள்    நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம்  அறிவித்துள்ளது. 

 நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். தோட்டங்களில் பறிக்கும் பச்சைத் தேயிலையை தனியாா் தேயிலை தொழிற்சாலை, கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனா். 

அதன்படி, ஜனவரி மாதத்துக்கான பச்சைத் தேயிலை விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பச்சைத் தேயிலைக்கு குறைந்தபட்ச சராசரி விலையாக கிலோ ரூ. 16.05ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஜனவரி மாத தேயிலை  ஏல விற்பனையின்  சராசரி விலையை அடிப்படையாகக்  கொண்டு நிா்ணயிக்கப்படுகிறது. இந்த விலையை தேயிலை தொழிற்சாலைகள் தவறாமல் வழங்குகிறதா என தேயிலை வாரியம் தொடா்ந்து கண்காணித்து வருவதாக தேயிலை வாரிய முதன்மை அதிகாரி எம்.பாலாஜி தெரிவித்துள்ளாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.