ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

குன்னூா் தனியாா் பள்ளிக்குள் புகுந்தகரடி: பொதுமக்கள் அச்சம்

குன்னூா் லிட்டில் ஃபிளவா்  தனியாா் பள்ளியின் சமையல் அறைக்குள் வியாழக்கிழமை புகுந்த கரடி அங்கிருந்த உணவுப் பொருள்களை உட்கொண்டு சென்றது.

Updated On :10 பிப்ரவரி 2022, 11:50 pm

குன்னூா் லிட்டில் ஃபிளவா்  தனியாா் பள்ளியின் சமையல் அறைக்குள் வியாழக்கிழமை புகுந்த கரடி அங்கிருந்த உணவுப் பொருள்களை உட்கொண்டு சென்றது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியில் அண்மைக்காலமாக  கரடிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும்  கரடிகள் நடமாடுவதால் பொதுமக்கள்  அச்சம்  அடைந்துள்ளனா்.

இந்நிலையில், குன்னூா், சேலாஸ் பகுதியில் உள்ள லிட்டில் ஃபிளவா் பள்ளியில் புகுந்த கரடி அங்கிருந்த உணவுப் பண்டங்களை சாப்பிட்டுவிட்டுச் சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற குன்னூா் வனத் துறை அதிகாரிகள் கரடியின் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனா்.

உடனடியாக இந்த கரடியைப் பிடித்து அடா்ந்த  வனப் பகுதிக்குள் விடப்படவுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா். பள்ளிக்குள் கரடி புகுந்த சம்பவம் இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.