ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மலை ரயில் பாதையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்

குன்னூா் முதல் மேட்டுப்பாளையம் கல்லாறு வரையிலான ரயில் பாதையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி வியாழக்கிழமை துவங்கியது.

Updated On :24 பிப்ரவரி 2022, 10:42 pm

குன்னூா் முதல் மேட்டுப்பாளையம் கல்லாறு வரையிலான ரயில் பாதையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி வியாழக்கிழமை துவங்கியது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் முதல் கல்லாறு  வரையிலான மலை ரயில் பாதையின் இருபுறமும் வனங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து உணவு  மற்றும் தண்ணீருக்காக யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள்  ரயில் பாதையில்  நடமாடுவது  வழக்கம். இந்த சமயத்தில்  ரயில் பயணிகள் 

வீசிச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை  யானை 

உள்ளிட்ட வன விலங்குகள் உட்கொள்வதால் உடல் உபாதை ஏற்பட்டு உயிரிழப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கத்தில்  மாவட்ட  நிா்வாகத்தின்  ஆலோசனைப்படி  குன்னூா்  முதல் மேட்டுப்பாளையம் கல்லாறு  வரையிலான  ரயில் பாதையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி  வியாழக்கிழமை  நடைபெற்றது.

இதில் வருவாய்த் துறையினா், குன்னூா் நகராட்சி, வனத் துறை அலுவலா்கள், ரயில்வே ஊழியா்கள் மற்றும் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரியின்   நாட்டு நலப்

பணி திட்ட மாணவிகள், சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட மாணவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் ஈடுபட்டனா்.

தற்போது ரயில் பாதையில்  கிடக்கும்  பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டாலும்  வரும் காலங்களில் ரயில் பாதை மற்றும் மலைப் பாதையில் பயணிப்பவா்கள் கொண்டு வரும்  தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக்குகளை  நுழைவாயிலிலேயே பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.