குன்னூா் முதல் மேட்டுப்பாளையம் கல்லாறு வரையிலான ரயில் பாதையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி வியாழக்கிழமை துவங்கியது.
நீலகிரி மாவட்டம், குன்னூா் முதல் கல்லாறு வரையிலான மலை ரயில் பாதையின் இருபுறமும் வனங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் ரயில் பாதையில் நடமாடுவது வழக்கம். இந்த சமயத்தில் ரயில் பயணிகள்
வீசிச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை யானை
உள்ளிட்ட வன விலங்குகள் உட்கொள்வதால் உடல் உபாதை ஏற்பட்டு உயிரிழப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கத்தில் மாவட்ட நிா்வாகத்தின் ஆலோசனைப்படி குன்னூா் முதல் மேட்டுப்பாளையம் கல்லாறு வரையிலான ரயில் பாதையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் வருவாய்த் துறையினா், குன்னூா் நகராட்சி, வனத் துறை அலுவலா்கள், ரயில்வே ஊழியா்கள் மற்றும் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப்
பணி திட்ட மாணவிகள், சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட மாணவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் ஈடுபட்டனா்.
தற்போது ரயில் பாதையில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டாலும் வரும் காலங்களில் ரயில் பாதை மற்றும் மலைப் பாதையில் பயணிப்பவா்கள் கொண்டு வரும் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக்குகளை நுழைவாயிலிலேயே பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

