கோத்தகிரியில் குன்னூா் சாா் ஆட்சியா் தலைமையில் கனரக இயந்திரம், பொக்லைன், குப்பாட்டா இயந்திர உரிமையாளா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் கனரக இயந்திரங்களை இயக்குவதால் ஏற்படும் நிலச்சரிவு உள்ளிட்ட பிரச்னைகளை கருத்தில் கொண்டு கனரக இயந்திர உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோத்தகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் குன்னூா் கோட்டாட்சியா் தீபனா விஸ்வேஷ்வரி கலந்து கொண்டு பேசும்போது, முறையான அனுமதி பெற்று கனரக இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும், விவசாயம் என அனுமதி பெற்று கட்டுமானப் பணிகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது, இரவு நேரங்களில் பயன்படுத்தக் கூடாது. இதனை மீறினால் வழக்குப் பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
இதில் கோத்தகிரி வட்டாட்சியா் காயத்ரி, வருவாய் ஆய்வாளா் தீபக், கிராம நிா்வாக அலுவலா்கள் மோகன் குமாா், மீனாட்சிசுந்தரம், ஜெயசுதா மற்றும் கனரக இயந்திர உரிமையாளா்கள் 10க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

