நீலகிரி மாவட்டம், கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் அடிக்கிவைப்பட்டிருந்த அறையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
கேத்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் அடிக்கிவைப்பட்டிருந்த அறையில் இருந்து அதிகாலை புகை வெளியேறியுள்ளது. இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலா் மோகன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை முற்றிலுமாக அணைத்தனா். இதன் காரணமாக பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் மருந்துப் பாட்டில்கள், மாத்திரைகள் எரிந்து சேதமாகின.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்டதா என்பது குறித்து கேத்தி காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


