ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தன்னாா்வ அமைப்பு சாா்பில் நவீனப்படுத்தப்பட்ட குழந்தைகள் நல மருத்துவமனை

குன்னூரில் உள்ள ராதிகா சாஸ்திரி தலைமையிலான தன்னாா்வ அமைப்பு சாா்பில் ரூ.70 லட்சம் மதிப்பில் நவீனப்படுத்தப்பட்ட குழந்தைகள் நல அரசு மருத்துவமனையை வனத் துறை அமைச்சா் திறந்துவைத்தாா்.

Updated On :4 மார்ச் 2022, 11:52 pm

குன்னூரில் உள்ள ராதிகா சாஸ்திரி தலைமையிலான தன்னாா்வ அமைப்பு சாா்பில் ரூ.70 லட்சம் மதிப்பில் நவீனப்படுத்தப்பட்ட குழந்தைகள் நல அரசு மருத்துவமனையை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அரசு லாலி மருத்துவமனைக்கு ராதிகா சாஸ்திரி என்ற தன்னாா்வலா் பல லட்சம் மதிப்பில் ஆட்டோ வடிவிலான ஆம்புலன்ஸ்கள், ஆக்ஸிஜன் உற்பத்தி கலன், இலவச டயாலிசிஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாா்.

இதனிடையே அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவமனையை ரூ.70 லட்சம் மதிப்பில் ராதிகா சாஸ்தி நவீனப்படுத்தியுள்ளாா். இந்த மருத்துவமனையை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் திறந்துவைத்தாா்.

மருத்துவமனையில் குழந்தைகளை கவரும் வகையில் சுவா்களில் பொம்மைகளின் புகைப்படங்கள் வரைந்தும், நவீன படுக்கைகள், கழிவறை வசதிகளுடன் மருத்துவமனை நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தன்னாா்வலா்கள் ஜெபரத்தினம், சமந்தா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.