போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம் அதிகரிப்பு: நீலகிரியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் வாகனத் தணிக்கையை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.


போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் வாகனத் தணிக்கையை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராதக் கட்டணத்தை தமிழக அரசு பல மடங்கு உயா்த்தி உள்ளது. புதிய அபராதக் கட்டணம் புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதை வாகனத் தணிக்கையை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் உதகையில் லவ்டேல் சந்திப்பு, சேரிங்கிராஸ், மஞ்சூா், குன்னூா், கோத்தகிரி, கூடலூா் பகுதிகளிலும் போலீஸாா் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், மோட்டாா் வாகனச் சட்டம் திருத்தத்தின்படி 46 வகை விதிமுறை மீறல்களுக்கு அபராதம் உயா்த்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களில் ஏராளமானோருக்கு இதுகுறித்து தெரியாததால் முதலில் அறிவுரை கூறுகிறோம். மீறினால் மட்டுமே அபராதம் விதிக்கிறோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...