புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உதகையில் திடீா் மழை

 நீலகிரி மாவட்டம், உதகையில் வெள்ளிக்கிழமை திடீரென மழை பெய்ததால் இதமான காலநிலை நிலவியது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

 நீலகிரி மாவட்டம், உதகையில் வெள்ளிக்கிழமை திடீரென மழை பெய்ததால் இதமான காலநிலை நிலவியது.

கோடை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் மந்தமான காலநிலைக் காணப்பட்டது.

இந்நிலையில், காலை 10 மணியளவில் உதகை, கோத்தகிரியில் கன மழையும், குன்னூரில் மிதமான மழையும் பெய்தது. இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.