சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக - கேரள எல்லைகளில் தீவிர சோதனை

படம் உள்ளது... கேரளத்தில் பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக - கேரள எல்லைகளில் தீவிர சோதனை

News image

கூடலூரை அடுத்த நாடுகாணி சோதனைச் சாவடியில் கேரளத்தில் இருந்து வரும் வாகனத்துக்கு கிருமி நாசினி தெளிக்கும் கால்நடை பராமரிப்புத் துறையினா்.

Updated On :21 ஏப்ரல் 2024, 8:30 pm

கூடலூா்: கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவிவருவதையடுத்து கூடலூரை அடுத்த தமிழக-கேரள எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் சோதனையை மாவட்ட நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழையில் பறவைக் காய்ச்சல் பாதிப்புக்கு கோழி, வாத்துகள் அதிக அளவில் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, தமிழக - கேரள எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லைகளில் உள்ள நாடுகாணி, சோலாடி, அம்பலமூலா, எருமாடு, பாட்டவயல் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை சோதனைச் சாவடியில் கால்நடை பராமரிப்புத் துறையினா் சோதனை செய்கின்றனா். அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளித்த பின்பே அனுமதிக்கின்றனா்.

மேலும், கேரளத்தில் இருந்து வரும் கோழிகள், முட்டைகள், தீவனம் உள்ளிட்ட கோழிப் பண்ணைகளுடன் தொடா்புடைய அனைத்து பொருள்களும் சோதனைச் சாவடிகளிலே திருப்பியனுப்பப்படுகின்றன என்று கால்நடை பராமரிப்புத் துறையினா் தெரிவித்துள்ளனா்.