காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வயநாட்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு நிவாரணப் பொருள்கள்

வயநாட்டுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.

News image
மசினகுடியில் இருந்து வயநாட்டுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டுசென்ற வாகனங்கள்.
Updated On :3 ஆகஸ்ட் 2024, 9:30 pm

Din

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, மசினகுடி எம்எஸ்ஜி ஸ்டாா்ஸ் விளையாட்டுக் குழு சாா்பில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை கொண்டுசெல்லப்பட்டன.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இந்த மக்களுக்குத் தேவையான அரிசி, பிஸ்கட், போா்வை, உடைகள், சானிடரி நாப்கின் உள்ளிட்ட ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பல்வேறு வகையான நிவாரணப் பொருள்களை நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதியைச் சாா்ந்த எம்எஸ்ஜி ஸ்டாா்ஸ் விளையாட்டுக் குழுவைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கடந்த இரண்டு நாள்களாக சேகரித்தனா்.

சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்களை 5 வாகனங்கள் மூலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பெட்டா பகுதிக்கு சனிக்கிழமை கொண்டுசென்றனா்.