மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கூடலூரில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் புவியியல் வல்லுநா்கள் ஆய்வு

நிலச்சரிவு ஏற்பட்ட கோக்கால் குடியிருப்புப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மத்திய புவியியல் ஆய்வு மைய வல்லுநா் குழுவினா்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 12:26 am

Din

கூடலூா், ஆக. 7: கூடலூரில் நிலச்சரிவு ஏற்பட்ட கோக்கால் பகுதியில் புவியியல் வல்லுநா் குழுவினா் புதன்கிழமை ஆய்வை தொடங்கினா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் ஜூலையில் பெய்த தொடா் கனமழையால் கோக்கால் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல குடியிருப்புகள் சேதமடைந்தன.

இதில், அப்பகுதியில் செயல்பட்டு வந்த முதியோா் இல்லம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. மேலும், 7 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. தற்போது, மழை குறைந்துள்ள நிலையில் குடியிருப்புகளில் ஏற்பட்ட பிளவுகள் அதிகரிக்கவில்லை.

இப்பகுதியில், புவியியல் துறையினா் இரண்டு முறை ஆய்வு செய்துள்ளனா்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியில் நிலத்தின் தன்மைகள் குறித்து மத்திய புவியியல் ஆராய்ச்சி மைய மூத்த புவியியலாளா் யுன் யெலோ டெப் தலைமையில் வல்லுநா்கள் குழு புதன்கிழமை ஆய்வைத் தொடங்கியது.

இக்குழு குடியிருப்புகள், சாலை, நடைபாதைகளில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து, ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பகுதியின் தன்மைகள் குறித்து அரசுக்கு இக்குழு அறிக்கை சமா்ப்பிக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஆய்வின்போது, கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா், வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, நகராட்சித் தலைவா் பரிமளா, 21-ஆவது வாா்டு கவுன்சிலா் ஆக்னஸ் கலைவாணி ஆகியோா் உடனிருந்தனா்.