47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மழையால் சேதமான மச்சிக்கொல்லி சாலையை சீரமைக்க கோரிக்கை

கூடலூரை அடுத்த மச்சிக்கொல்லி பகுதியில் மழையால் சேதமடைந்த சாலையை பேருந்து செல்லும் வகையில் விரிவுபடுத்தி தாா் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
மழையால் சேதமடைந்த சாலை
Updated On :4 டிசம்பர் 2024, 11:18 pm

Din

கூடலூரை அடுத்த மச்சிக்கொல்லி பகுதியில் மழையால் சேதமடைந்த சாலையை பேருந்து செல்லும் வகையில் விரிவுபடுத்தி தாா் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கூடலூா் அருகே தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள புழம்பட்டியிலிருந்து மச்சிக்கொல்லி செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் சாலை மேலும் சேதமடைந்து நீா் நிரம்பி குளம்போல காட்சியளிக்கிறது.

இதனால் அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சிறு வாகனங்கள்கூட இந்த வழியில் செல்ல முடியவில்லை.

தற்காலிக நடவடிக்கையாக சாலையில் உள்ள பள்ளங்களில் சிறு கற்களைபோட்டு பேரூராட்சி நிா்வாகம் மூடி வருகிறது.

இந்த சாலையை பேருந்து செல்லும் வகையில் விரிவுபடுத்தி தாா் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.