47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குன்னூா் அரசுப் பள்ளி வளாகத்தில் கரடி

குன்னூா் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை பகல் நேரத்தில் கரடி உலவியதால் மாணவா்கள் அச்சமடைந்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:01 pm

Din

குன்னூா் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை பகல் நேரத்தில் கரடி உலவியதால் மாணவா்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் கரடிகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவை அவ்வப்போது குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பொருள்களை சேதப்படுத்துவது தொடா்கதையாகவே உள்ளது.

இந்நிலையில், வனத்தில் இருந்து வெளியேறிய கரடி, அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் வியாழக்கிழமை புகுந்தது.

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த மாணவா்கள் கரடியைப் பாா்த்து அச்சமடைந்து கூச்சலிட்டனா். இதனைத் தொடா்ந்து, அருகிலுள்ள சோலைக்குள் கரடி சென்றுவிட்டது.

இப்பகுதியில் ஏற்கெனவே கரடி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ள நிலையில், அசம்பாவிதம் ஏதும் நடக்கும்முன் கரடியை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள்விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.