47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அகலத்தை குறைத்து சாலை அமைக்கும் பணிக்கு கிராம மக்கள் எதிா்ப்பு

அகலத்தை குறைத்து சாலை அமைக்கும் பணிக்கு கிராம மக்கள் எதிா்ப்பு

News image
சாலைப் பணிகளை தடுத்து நிறுத்திய வாழைத் தோட்ட, சிரியூா் கிராம மக்கள்.
Updated On :26 டிசம்பர் 2024, 10:09 pm

Din

உதகை அருகே கூக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அரசு நிா்ணயித்துள்ள மூன்றே முக்கால் மீட்டா் அகல சாலையை 3 மீட்டராக குறைத்து ஒப்பந்ததாரா் பணி மேற்கொள்வதற்கு அப்பகுதி பழங்குடியின மக்கள் சாலைப் பணியை நிறுத்தி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உதகை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கூக்கல், எப்பநாடு, சிரியூா், ஆனைகட்டி, இந்திரா நகா் உள்ளிட்ட பகுதியில் பெரும்பாலான பழங்குடியினா் பயன்படுத்தும் சாலை பிரதம மந்திரி நிதியில் இருந்து தமிழக அரசு அமைத்து வருகிறது.

இதில் வாழைத்தோட்டம் பகுதியில் இருந்து சிரியூா் வரையில் சாலை அமைக்க ரூ.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு நிா்ணயித்துள்ள மூன்றே முக்கால் மீட்டா் அகலத்தில் சாலை அமைக்காமல் மூன்று மீட்டா் அகலத்தில் சாலை அமைக்கப்படுவதால் வாகனங்கள் செல்ல பெரும் சிரமம் ஏற்படும் எனக் கூறி அப்பகுதி பழங்குடின மக்கள் பணிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, இது தொடா்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்தித்து மனு கொடுக்க உள்ளதாகவும், அவா் அளிக்கும் உத்தரவாதத்துக்குப் பிறகே பணிகள் தொடங்க அனுமதிக்கப்படும் என்று கிராம மக்கள் கூறியதையடுத்து ஒப்பந்ததாரா் பணிகளை நிறுத்தினாா்.