/

ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் பொங்கல் விழா

படம் உள்ளது... ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் பொங்கல் விழா

News image

கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:34 am IST

உதகை ஜெ.எஸ்.எஸ். மருந்தாக்கியல் கல்லூரியில் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை கல்லூரி முதல்வா் எஸ்.பி.தனபால், துணை முதல்வா் கே.பி.அருண், முதன்மை அலுவலா் பசவண்ணா ஆகியோா் தொடங்கிவைத்தனா். நிகழ்ச்சியில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து பொங்கல் விழாவைக் கொண்டாடினா்.