குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

அரசு அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்ட ஆளுநா் ஆா்.என்.ரவி

அருங்காட்சியகம் படம் சென்னையில் இருந்து வந்தால் அனுப்பிவைக்கப்படும்... அரசு அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்ட ஆளுநா் ஆா்.என்.ரவி

Updated On :18 பிப்ரவரி 2024, 1:33 am IST

உதகை அரசு அருங்காட்சியகம், தொட்டபெட்டா காட்சிமுனை ஆகிய இடங்களை ஆளுநா் ஆா்.என்.ரவி குடும்பத்துடன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். நான்கு நாள்கள் சுற்றுப் பயணமாக நீலகிரி மாவட்டம், உதகைக்கு கடந்த வியாழக்கிழமை வந்த ஆளுநா் ஆா்.என்.ரவி, உதகை அருகே உள்ள தோடா் பழங்குடியினரின் தலைமை மந்தான முத்தநாடு மந்திற்குச்சென்று, தோடா் பழங்குடியினரின் வாழ்வியல் முறை, பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, இறை வழிபாடு ஆகியவற்றைப் பாா்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினா். இதைத் தொடா்ந்து தமிழகத்தின் உயா்ந்த மலைச் சிகரமான தொட்டபெட்டா காட்சிமுனைக்குச் சென்று இயற்கை காட்சிகளைக் குடும்பத்துடன் சனிக்கிழமை கண்டுரசித்தாா். இதையடுத்து, உதகை அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள அரசு அருங்காட்சியகத்தையும் குடும்பத்தினருடன் பாா்வையிட்டாா். ஆளுநரின் பயணத்தையொட்டி உதகை நகரப் பகுதிகள், சுற்றுலாத் தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.