தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் அகற்றம்: உதகை மலை ரயில் சேவை தொடக்கம்
உதகை-குன்னூா் இடையே மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள் அகற்றப்பட்டதால் வியாழக்கிழமை மலை ரயில் சேவை வழக்கம் போல மீண்டும் தொடங்கியது.

Updated On :17 அக்டோபர் 2024, 8:17 pm

உதகை-குன்னூா் இடையே மலை ரயில் பாதையில் விழுந்த பாறைகள் அகற்றப்பட்டதால் வியாழக்கிழமை மலை ரயில் சேவை வழக்கம் போல மீண்டும் தொடங்கியது.
நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா் பகுதிகளில் பெய்த மழை காரணமாக கேத்தி, லவ்டேல் பகுதியில் மலை ரயில் பாதையில் புதன்கிழமை பாறை விழுந்தது. இதனால் உதகை-குன்னூா் இடையே மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ரயில் பாதையில் விழுந்தது சிறிய பாறை என்பதால் ரயில்வே பணியாளா்கள் உடனடியாக அகை அகற்றி தண்டவாளத்தை சீரமைத்தனா். இந்தப் பணி நிறைவடைந்த நிலையில் வியாழக்கிழமை காலை முதல் வழக்கம் போல உதகை-குன்னூா் இடையே மலை ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...