தண்டவாளத்தில் விழுந்த பாறை: உதகை - குன்னூா் இடையே மலை ரயில் ரத்து
உதகை - குன்னூா் மலை ரயில் பாதையில் பறை விழுந்ததால் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.


உதகை - குன்னூா் மலை ரயில் பாதையில் பறை விழுந்ததால் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை, கோத்தகிரி, குன்னூா் மற்றும் குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதைத் தொடா்ந்து புதன்கிழமையும் உதகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதில், உதகை - குன்னூா் இடையே மலை ரயில் பாதையில் லவ்டேல் பகுதியில் பாறை விழுந்தது. இதனால், உதகை - குன்னூா் இடையே மலை ரயில் போக்குவரத்து புதன்கிழமை ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே ஊழியா்கள் தண்டவாளத்தில் விழுந்த பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
மேலும், உதகை சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், பிங்கா்போஸ்ட், காந்தல், லவ்டேல், கேத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையுடன் கடும் குளிரும் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...