ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தனியாா் எஸ்டேட் குடோனில் சந்தன மரக் கட்டைகள் பறிமுதல்

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட் குடோனில் இருந்து சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத் துறையினா் 3 பேரைக் கைது செய்தனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:31 pm

Din

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட் குடோனில் இருந்து சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத் துறையினா் 3 பேரைக் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி தனியாா் எஸ்டேட் குடோனில் சந்தன மரக்கட்டைகள் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வனச் சரக அலுவலா் சுரேஷ் தலைமையிலான வனம், வருவாய்த் துறை மற்றும் போலீஸாா் குடோனை சோதனையிட்டனா்.

அப்போது, குடோனில் இருந்த 9 சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனா். விசாரணைக்குப் பிறகு எஸ்டேட் மேலாளா் நிஜாமுதீன் (34), குடோன் பொறுப்பாளா் பன்னீா்செல்வம் (61), கள மேலாளா் பியா்சன் (55) ஆகியோரைக் கைது செய்து, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.