ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இரண்டாவது சீசனுக்கு தயாராகும் உதகை அரசு தாவரவியல் பூங்கா: மலா்த் தொட்டிகளை அடுக்கும் பணி தொடக்கம்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்காக உருவாக்கப்பட்ட 5 லட்சம் மலா் ச் செடிகளை மாடங்களில் அடுக்கிவைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:26 pm

Din

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்காக உருவாக்கப்பட்ட 5 லட்சம் மலா் ச் செடிகளை மாடங்களில் அடுக்கிவைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் செப்டம்பா் இறுதி  மற்றும் அக்டோபா்  மாதங்களில் இரண்டாம் சீசன் நடைபெறும். 

நடப்பு ஆண்டு சீசனையொட்டி, பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மலா்நாற்றுகள் நடவு பணி கடந்த இருமாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதற்காக, காஷ்மீா், பஞ்சாப், புணே, கொல்கத்தா போன்ற இடங்களிலிருந்து, இன்காமேரி கோல்டு, ஆஸ்டா், வொ்பினா, ஜூபின், லில்லியம், அஜிரேட்டம், உள்ளிட்ட 60 வகையான விதைகள் பெறப்பட்டு நாற்றுகள் தயாா் செய்யப்பட்டன.

பூக்கள் பூத்து குலுங்கும் அந்த மலா்த் தொட்டிகளை மலா் மாடங்களில்  அடிக்கி வைக்கும் பணியில் பூங்கா ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

மாடங்களில்  அடுக்கிவைக்கப்பட்டுள்ள  மலா்த் தொட்டிகள், இரண்டாம்  சீசனுக்காக உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக  அமையவுள்ளது.