பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

முதுமலை யானைகள் முகாமை பாா்வையிட்ட குடியரசு துணைத் தலைவா்!

முதுமலையில் உள்ள வளா்ப்பு யானைகள் முகாமை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் குடும்பத்துடன் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

News image

படுகர் இன மக்களுடன் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்.

Updated On :26 ஏப்ரல் 2025, 7:00 pm

Din

நீலகிரி மாவட்டம், முதுமலையில் உள்ள வளா்ப்பு யானைகள் முகாமை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் குடும்பத்துடன் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

உதகையில் நடைபெற்ற துணை வேந்தா்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் குடும்பத்துடன் உதகையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் சனிக்கிழமை மசினகுடி சென்றாா்.

பின்னா் முதுமலை தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில் உள்ள வளா்ப்பு யானைகளுக்கு கரும்பு வழங்கினாா். எலிபென்ட் விஸ்பரா்ஸ் குறும்பட கதாநாயகா்களான பழங்குடி தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, வனத் துறை வாகனம் மூலம் அவரது உறவினா்களுடன் வனப் பகுதிக்குள் சபாரி சென்றனா். பின்னா் முதுமலையில் இருந்து மசினகுடி வரை சாலை வழியாகச் சென்று, மசினகுடியில் இருந்து ஹெலிகாப்டா் மூலமாக உதகைக்கு சென்றாா்.

குடியரசு துணைத் தலைவா் வருகை காரணமாக முதுமலை, தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாம் பகுதிகளில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.