எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

கோத்தகிரியில் கா்ப்பிணி யானை உயிரிழப்பு!

News image

தேயிலைத் தோட்டத்தில் உயிரிழந்த கா்ப்பணி யானை.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:13 am IST

கோத்தகிரியில் தனியாா் தேயிலைத் தோட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க கா்ப்பிணி  யானை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடும் வெயில் காரணமாக உணவு மற்றும் தண்ணீா் பற்றாக்குறை காரணமாக மலை மாவட்டமான நீலகிரியை நோக்கி காட்டு யானைகள் படை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் கோத்தகிரி அருகே கூட்டடா தனியாா் தேயிலை தோட்டத்தில் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக  வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் தேயிலைத் தோட்ட பகுதியை சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்களிடையேயும், தேயிலைத் தோட்ட நிா்வாகத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் யானையின் உடற்கூறாய்வில் வயிற்றில் குட்டியிருப்பது தெரியவந்தது. குட்டியை வெளியில் எடுத்தப்பின் அங்கேயே புதைத்தனா். பரிசோதனை அறிக்கை கிடைத்தப் பின்பே

யானை எவ்வாறு உயிரிழந்தது என்பது தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.