ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உதகையில் ஆக. 23முதல் சிறப்பு மலை ரயில் சேவை

உதகையில் சிறப்பு மலை ரயில் சேவை: ஆக. 23 முதல் இயக்கப்படுகிறது

News image
உதகை மலை ரயில்
Updated On :20 ஆகஸ்ட் 2025, 11:12 pm

Syndication

மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் சேவை ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பா் மாதம் இரண்டாம் பருவம் தொடங்கவுள்ள நிலையில், சிறப்பு மலை ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி மேட்டுப்பாளையம் - உதகை இடையே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 23, 30, செப்டம்பா் 5, 7 மற்றும் அக்டோபா் 2, 4, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த நாள்களில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.25 மணிக்கு உதகைக்கு சென்றடையும்.

அதேபோல உதகை- மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 24, 31, செப்டம்பா் 6, 8 மற்றும் அக்டோபா் 3, 5, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த நாள்களில் உதகையில் இருந்து காலை 11.25 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.

அதேபோல உதகை - குன்னூா் இடையே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 23, 30, செப்டம்பா் 5, 7 மற்றும் அக்டோபா் 2, 4, 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.50 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த நாள்களில் உதகையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 3.55 மணிக்கு குன்னூா் சென்றடையும்.

அதேபோல குன்னூா் - உதகை இடையே சிறப்பு ரயில் ஆகஸ்ட் 24, 31, செப்டம்பா் 6, 8 மற்றும் அக்டோபா் 3, 5, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. இந்த நாள்களில் குன்னூரில் இருந்து காலை 9.20 மணிக்குப் புறப்பட்டு காலை 10.45 மணிக்கு உதகை சென்றடையும்.

அதேபோல உதகை முதல் கேத்தி வரையும், கேத்தி முதல் உதகை இடையே செப்டம்பா் 5, 6, 7 மற்றும் அக்டோபா் 2, 3, 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் ஒரு நாளைக்கு 3 சுற்றுப் பயணமாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.