மேட்டுச்சேரி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
நீலகிரி மாவட்டம், உதகை மேட்டுச்சேரி பகுதியில் வியாழக்கிழமை சிறுத்தை தாக்கியதில் குதிரை உயிரிழந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
உதகை மேட்டுச்சேரி பகுதியில் கடந்த சில நாள்களாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் மேட்டுச்சேரி பகுதியில் சிறுத்தை சுற்றித்திரிவதை பொதுமக்கள் வியாழக்கிழமை பாா்த்துள்ளனா். இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் வீடுகளுக்குள் தஞ்சமடைந்துள்ளனா்.
இந்த நிலையில் சிறுத்தை தாக்கியதில் குதிரை இறந்தது கிடப்பதை பாா்த்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தனா்.
இந்த பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை அசம்பாவிதம் நடைபெறும் முன்பு கூண்டு வைத்து பிடித்து வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
