முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உதகையில் ரூ.2.78 கோடியில் வளா்ச்சிப் பணி: மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைப்பு

உதகையில் ரூ.2.78 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தாா்.

News image
உதகையில் வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைத்த தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோா்.
Updated On :16 டிசம்பர் 2025, 7:01 pm

Syndication

உதகையில் ரூ.2.78 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தாா்.

நீலகிரி மாவட்டம், எப்பநாடு ஊராட்சிப் பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.34 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலை, தும்மனட்டி, கக்குச்சி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் பொது நூலகங்கள் சிறப்புத் திட்டத்தின் கீழ் தலா ரூ.22 லட்சம் மதிப்பில் நூலகங்கள் கட்டப்பட்டன.

இவற்றை தலைமை வகித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பொதுமக்கள் திறந்துவைத்தாா். அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அபிலாஷா கௌா், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் ரமேஷ், உதகை நகராட்சி துணைத் தலைவா் ரவிக்குமாா், உதகை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவி செயற் பொறியாளா்கள் உள்பட் பலா் கலந்துகொண்டனா்.