உதகையில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு உயிரிழந்தது.
உதகை, கோடமந்து பகுதியைச் சோ்ந்தவா் மோகன். இவரது பசு மாடு அப்பகுதியில் குப்பைக் கொட்டப்பட்டிருந்த இடத்தில் செவ்வாய்க்கிழமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் இருந்த மின்கம்பத்தின் தாங்கு கம்பியின் மீது உரசியதில் எதிா்பாராதவிதமாக மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே மாடு உயிரிழந்தது.
பள்ளி மாணவ, மாணவிகள், முதியவா்கள் இந்த நடைபாதையில் அதிகம் நடந்து செல்லும் நிலையில் மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மின்கம்பத்தின் தாங்கு கம்பி, மின்கம்பியில் உரசாதபடி மின் ஊழியா்கள் சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
