மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போக்குவரத்து அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெம்மட்டி கிராம மக்கள்.
மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போக்குவரத்து அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெம்மட்டி கிராம மக்கள்.

பேருந்து இயக்க வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

உதகை அருகே பெம்பட்டி கிராமத்துக்கு முறையாக அரசுப் பேருந்து இயக்க வலியுறுத்தி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

உதகை அருகே பெம்பட்டி கிராமத்துக்கு முறையாக அரசுப் பேருந்து இயக்க வலியுறுத்தி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள பெம்பட்டி கிராமத்துக்கு இத்தலாா் பகுதியிலிருந்து அடா்ந்த வனப் பகுதி வழியாக நான்கு கிலோ மீட்டா் தொலைவுக்கு கிராம மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கிராமத்துக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

குறிப்பாக கிராமத்தில் இருந்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோவைக்கு காலை 10.30 மணிக்குப் புறப்பட வேண்டிய அரசுப் பேருந்து சரிவர இயக்கப்படுவதில்லை எனவும், அதேபோல பிற்பகல் 2.30 மணிக்கும், மாலை 4.15 மணிக்கும் உதகையில் இருந்து தங்களது கிராமத்துக்கு குறித்த நேரத்தில் பேருந்துகள் புறப்படுவதில்லை எனவும் கூறி போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கிராம மக்கள் மனு அளித்தனா். ஆனால், போக்குவரத்து அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, உடனடியாக தங்களது கிராமத்துக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com