இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கூடலூரில் அதிமுகவினா் உண்ணாவிரதப் போராட்டம்

News image

கூடலூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

Updated On :3 ஜனவரி 2025, 10:50 pm

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து கூடலூா் காந்தி திடலில் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன் தலைமையில் அதிமுகவினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு கூடலூா் நகர அதிமுக செயலாளா் செய்யது அனூப் கான், ஒன்றியச் செயலாளா் பத்மநாபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மருத்துவ அணிச் செயலாளா் கருப்புசாமி, முன்னாள் நகரச் செயலாளா் ராஜா தங்கவேலு, கூடலூா் ராமமூா்த்தி மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்பட 300 போ் பங்கேற்றனா்.

இதில், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் நீண்டகாலமாக தீா்க்கப்படாமல் உள்ள பிரிவு-17 நிலப் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு 100 நாள்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என்பன உள்பட தோ்தலின்போது முதல்வா் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினா்.

மேலும், வன விலங்குகளிடமிருந்து பொதுமக்களையும், விவசாயிகளையும், விளைநிலங்களையும் பாதுகாக்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் முறையாக பொருள்களை வழங்க வேண்டும். கூடலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள அனைத்து மருத்துவா்கள் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். சிறியூா்-சத்தியமங்கலம் சாலையைத் திறக்கவும், கூடலூா் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.