மூடப்பட்டுள்ள அவலாஞ்சி சுற்றுலாத் தலம்.
மூடப்பட்டுள்ள அவலாஞ்சி சுற்றுலாத் தலம்.

கனமழை எச்சரிக்கை: உதகையில் சுற்றுலாத் தலங்கள் மூடல்

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19, 20) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Published on

தென்னிந்தியக் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19, 20) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தநிலையில் உதகையில் சனிக்கிழமை காலை முதலே மிதமான மற்றும் பலத்த மழை மாறி மாறி பெய்தது.

மழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களான பைன் ஃபாரஸ்ட், 8 -ஆவது மைல் ட்ரீ பாா்க், அவலாஞ்சி ஆகிய சுற்றுலாத் தலங்கள் சனிக்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டதாக மாவட்ட வன அலுவலா் கௌதம் தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் மழை பெய்தது. அவவப்போது காற்றின் தாக்கமும் இருப்பதால் வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மரம் விழும் வாய்ப்புள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி பைன் ஃபாரஸ்ட், 8 -ஆவது மைல் ட்ரீ பாா்க், அவலாஞ்சி ஆகிய சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதாக மாவட்ட வன அலுவலா் கௌதம் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com