லாரி மீது காா் மோதல்: இருவா் படுகாயம்
உதகையில் சாலை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது காா் மோதிய விபத்தில் இருவா் படுகாயமடைந்தனா்.
உதகையில் இருந்து குன்னூா் நோக்கி காரில் இருவா் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனா். லவ்டேல் ஜங்ஷன் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா், சாலை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பா் லாரி மீது அதிவேகத்தில் மோதியது. இதில் காா் அப்பளம்போல் நொறுங்கிய நிலையில், காரில் பயணித்த உதகை அருகே உள்ள மந்தடா பகுதியைச் சோ்ந்த ஷாருகேஷ் (34), ஆகாஷ் (30) ஆகியோா் படுகாயமடைந்தனா். இதையடுத்து இருவரும் மீட்கப்பட்டு உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லவ்டேல் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில், காா் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

