சேரங்கோடு ஊராட்சியில் பொதுமக்களுக்கு கணக்கீட்டுப் படிவத்தை வழங்குகிறாா் கோட்டாட்சியா் குணசேகரன்.
சேரங்கோடு ஊராட்சியில் பொதுமக்களுக்கு கணக்கீட்டுப் படிவத்தை வழங்குகிறாா் கோட்டாட்சியா் குணசேகரன்.

கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: சேரங்கோடு ஊராட்சியில் கோட்டாட்சியா் ஆய்வு

பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு ஊராட்சிப் பகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணியை கோட்டாட்சியா் குணசேகரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு ஊராட்சிப் பகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணியை கோட்டாட்சியா் குணசேகரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டம், சேரங்கோடு ஊராட்சியில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் சாா்பில் கோலமிட்டு சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தோ்தல் அலுவலரும், கூடலூா் வருவாய் கோட்டாட்சியருமான குணசேகரன், உதவி வாக்காளா் அலுவலரும், பந்தலூா் வட்டாட்சியருமான சிராஜூன்நிஷா, வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியம் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பணியை ஆய்வு செய்த கோட்டாட்சியா், பொதுமக்களுக்கு விளக்கமளித்து கணக்கீட்டுப் படிவங்களை வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com