லவ்டேல் பகுதியில் காணப்பட்ட பனிமூட்டம்.
லவ்டேல் பகுதியில் காணப்பட்ட பனிமூட்டம்.

உதகையில் கடும் பனிமூட்டம்: பொதுமக்கள் அவதி

உதகையில் புதன்கிழமை கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள், தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் அவதியடைந்தனா்.
Published on

உதகையில் புதன்கிழமை கடும் பனிமூட்டம் நிலவியதால் பொதுமக்கள், தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் அவதியடைந்தனா்.

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதலே பனிமூட்டம் நிலவிய நிலையில் லேசான சாரல் மழையும் பெய்தது. இனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.

இதேபால, குந்தா, லவ்டேல், கெரடா, சாந்தூா் உள்ளிட்ட பகுதிகளில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக தேயிலை தோட்டத் தொழிலாளா்கள் பணிக்குச் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கினா்.

X
Dinamani
www.dinamani.com