பெல்லட்டிமட்டம் பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
நீலகிரி
குன்னூா் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மரம்
குன்னூா் அருகே பெல்லட்டிமட்டம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் புதன்கிழமை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூா் அருகே பெல்லட்டிமட்டம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் புதன்கிழமை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் சாரல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், குன்னூா்-கோத்தகிரி சாலையில் பெல்லட்டி மட்டம் பகுதியில் பெரிய மரம் சாலையின் குறுக்கே புதன்கிழமை விழுந்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீா்செய்தனா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.