உபாசி வளாகத்தில் நடமாடிய சிறுத்தை
உபாசி வளாகத்தில் நடமாடிய சிறுத்தை

குன்னூரில் சிறுத்தை நடமாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் உபாசி பகுதியில் வியாக்கிழமை அதிகாலை காணப்பட்ட சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
Published on

நீலகிரி மாவட்டம், குன்னூா் உபாசி பகுதியில்  வியாக்கிழமை அதிகாலை காணப்பட்ட சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

குன்னூரின் முக்கிய பகுதியான  உபாசி வளாகத்தில்  40-க்கும் மேற்பட்ட அலுவலக குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தேயிலை கிடங்குகள் உள்ளன.

இந்நிலையில் உபாசி வளாகத்தில் சிறுத்தை நடமாடியது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள்  மிகுந்த அச்சமடைந்துள்ளனா்.

அசம்பாவிதங்கள் நடைபெறும்  முன்பு  சிறுத்தையை  கூண்டுவைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com