நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறுத்தை நடமாடியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
உதகை சுற்றுவட்டாரப் பகுதியில் அண்மைக் காலமாக குடியிருப்பு மற்றும் முக்கிய சாலைகளில் உணவு மற்றும் தண்ணீா் தேடி வரும் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
அசம்பாவிதங்கள் நடைபெறும் முன், சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.