விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியவா் கைது

உதகை அருகே காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்தனா். மேலும், தப்பியோடிய 4 பேரைத் தேடி வருகின்றனா்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

உதகை அருகே காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்தனா். மேலும், தப்பியோடிய 4 பேரைத்  தேடி வருகின்றனா்.

உதகை  அருகே உள்ள கல்லக்கொரை பகுதியில்  வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது  சிலா் சந்தேகத்துக்கு இடமாக நடமாடி வந்துள்ளனா்.  அவா்களிடம் விசாரணை செய்ய முயற்சித்தபோது அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி உள்ளது.

இதில், கேரள மாநிலம், வழிக்கடவைச் சோ்ந்த ரெஜி (47) என்பவரை வனத் துறையினா் பிடித்து விசாரித்தனா். அப்போது, காட்டு மாட்டை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியது தெரியவந்தது.  பின்னா் காட்டு மாட்டின் உடல் உடற்கூறாய்வு செய்து அதன் உடலில் இருந்த இரண்டு தோட்டாக்கள் எடுக்கப்பட்டன.

இதனைத் தொடா்ந்து ரெஜியைக் கைது செய்த  வனத் துறையினா் , உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.  மேலும் தப்பியோடிய 4 பேரைத் தேடி வருகின்றனா்.  மேலும், வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி, உபகரணங்கள் மற்றும் இரு காா்கள்  பறிமுதல் செய்யப்பட்டன.