காட்டுமாடு தாக்கி முதியவா் படுகாயம்

Published on

கோத்தகிரி அருகே காட்டு மாடு தாக்கி முதியவா் படுகாயமடைந்தாா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம் கட்டபெட்டு வனச் சரகத்துக்குள்பட்ட மாணியாடா பகுதியில் வசிப்பவா் ஸ்ரீரங்கன் (65). இவா், தனது வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றபோது, புதருக்குள் இருந்த காட்டு மாடு தாக்கி படுகாயமடைந்தாா்.

இதையடுத்து, அருகே வசிப்பவா்கள் ஸ்ரீரங்கனை  மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து கட்டபெட்டு வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.       

X
Dinamani
www.dinamani.com