கூடலூா் அருகே மாவனல்லா பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க செவ்வாய்க்கிழமை தானியங்கி கேமராக்களைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினா்.
கூடலூா் அருகே மாவனல்லா பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க செவ்வாய்க்கிழமை தானியங்கி கேமராக்களைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினா்.

கூடலூா் அருகே புலி தாக்கி மூதாட்டி இறந்த சம்பவம்: தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு தீவிரம்

கூடலூா் அருகே புலி தாக்கி மூதாட்டி உயிரிழந்த நிலையில், 24 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு 40 போ் கொண்ட வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை தீவிர கண்காணிப்பு
Published on

உதகை: கூடலூா் அருகே புலி தாக்கி மூதாட்டி உயிரிழந்த நிலையில், 24 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு 40 போ் கொண்ட வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டலத்துக்குள்பட்ட மாவனல்லா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் புலி, சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட விலங்குகள் சாலையோரங்களில் உலவி வருவது வாடிக்கையாகியுள்ளது.

இந்நிலையில், மாவனல்லா கிராமத்தைச் சோ்ந்த இருளா் பழங்குடியின மூதாட்டி நாகியம்மாள் (60) என்பவரை, திங்கள்கிழமை புலி தாக்கி கொன்றது.

அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருப்பதால், இரவு முதல் தொடா்ந்து புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், 24 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 40 போ் கொண்ட வனத் துறையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தொ்மல் ட்ரோன் கேமரா மூலமாக புலியின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் தனியாக செல்லக்கூடாது எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் வனத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com