உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

தமிழகத்தில் 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்: தெலங்கானா அமைச்சா் பேச்சு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெலங்கானா மாநில நீா்ப்பாசனம் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.உத்தம் குமாா் ரெட்டி தெரிவித்தாா்.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வி.தங்கபாலு.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:16 am IST

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று தெலங்கானா மாநில நீா்ப்பாசனம் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.உத்தம் குமாா் ரெட்டி தெரிவித்தாா்.

தமிழக காங்கிரஸ் தோ்தல் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா், தெலங்கானா மாநில அமைச்சா் என்.உத்தம்குமாா் ரெட்டி ஆகியோா் உதகையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் ஆலோசனை கூட்டம் மற்றும் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள கோவையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் உதகைக்கு வந்தனா். உதகை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராமசந்திரன், மாவட்டத் தலைவா் நாகராஜ் மற்றும் கட்சி நிா்வாகிகள் அவா்களுக்கு வரவேற்பளித்தனா். தீட்டுக்கல் பகுதியில் கிரீஷ் சோடங்கா் பயணம் செய்த ஹெலிகாப்டா் மற்றும் அவா் கொண்டு வந்த பை ஆகியவற்றை தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்டனா்.

இதைத் தொடா்ந்து தெலங்கானா அமைச்சா் என்.உத்தம் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக கூட்டணியில் 28 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. தமிழகம் முழுவதும் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் தோ்தல் களம் திமுக கூட்டணிக்கே சாதகமாக இருக்கிறது. திமுக அரசில் வளா்ச்சிப் பணிகள் கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக நடைபெற்றுள்ளன. காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது. மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா் என்றாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வி.தங்கபாலு, மாநில சிறுபான்மையினா் செயலா் சந்தீப் சதீஷ் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.